கள்ளழகர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை


கள்ளழகர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
x

கள்ளழகர் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டன

மதுரை

அழகர்கோவில்,

மதுரை அருகே கள்ளழகர் கோவிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.62 லட்சத்து, 21 ஆயிரத்து 509-ம், தங்கம் 230 கிராமும், வெள்ளி 339 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் பக்தர்களின் காணிக்கையாக வரப் பெற்று இருந்தது. உண்டியல்கள் திறப்பின் போது கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை ஆணையர் சுரேஷ், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, ஆய்வாளர் அய்யம்பெருமாள், கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதீபா, அருள் செல்வன், உள்துறை பேஷ்கார் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story