மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை


மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
x

மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை பணி நடந்தது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் ேகாவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் 10 உண்டியல்கள், கோசாலை உண்டியல் 1 ஆகியவை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.37 லட்சத்து 26 ஆயிரத்து 24, தங்கம் 151 கிராம், வௌ்ளி 971 கிராம் ஆகியவை கிடைத்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சாத்தூர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு, அய்யப்ப சேவா சங்கம் மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்து அறநிலைய துறை விருதுநகர் மாவட்ட உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் கருணாகரன்ஆகியோரின் தலைமையில் பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் படியும், அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் ஆகியோராது வழிகாட்டுதலின் படியும் உண்டியல் திறப்பு பணிகள் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு யூடியூப் வாயிலாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


Next Story