அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்


அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்
x

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வேலூரில் நடந்தது.

வேலூர்

வேலூர் நகர், புறநகர் ஒன்றியங்களை சேர்ந்த 4, 5-ம் வகுப்பு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் குறித்த 3 நாள் பயிற்சி முகாம் வேலூர் ஊரீசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது. ஊரீசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எபினேசர் முன்னிலை வகித்தார். ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு) மணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் வேணுகோபால், பரமேஸ்வரன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்த முக்கியத்துவம் குறித்தும், கற்றல் கற்பித்தல் நிகழ்வில் அதன் பங்கு பற்றியும் விளக்கி கூறினர்.

அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளரும், பயிற்சி ஒருங்கிணைப்பாளருமான அலமேலு எண்ணும், எழுத்தும் பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் குழந்தைகளை மையப்படுத்தி அவர்களின் திறனை வளர்ப்பதற்கான படைப்பாற்றல் களஞ்சியம், செயல்பாட்டு களஞ்சியம், அறிவியல் களஞ்சியம் மற்றும் வரலாற்றுக் களஞ்சியம் ஆகிய களஞ்சியங்கள் வகுப்பறையில் அமைப்பதற்கு ஏதுவாக இந்த பயிற்சியில் மாதிரி களஞ்சியங்கள் அமைத்திருந்ததை ஆசிரியர்களுக்கு விளக்கினார். பயிற்சியில் 218 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி தொடர்பான தயாரிப்புகளை வட்டார வளமைய பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் சத்யநாராயணன், சாருமதி ஆகியோரும், பயிற்சி ஏற்பாடுகளை வேலூர் நகர், புறநகர் ஒன்றிய வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் சுரேஷ், அருண் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story