மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்


மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

திருச்செந்தூர் வட்டார அளவிலான மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி தூத்துக்குடி மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் வானரமுட்டி மாவட்ட ஆசிரியப்பயிற்சி மற்றும் கல்வி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர் ஒன்றியத்தில் இப்பயிற்சி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது. வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சோல்டா கிரேனா ராஜாத்தி பார்வையிட்டு எண்ணும் எழுத்தும் பயிற்சியின் சிறப்புகளை ஆசிரியர்களிடம் எடுத்துரைத்தார்.

தூத்துக்குடி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் (தொடக்கல்வி) மற்றும் திருச்செந்தூர் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர்கள் பாஸ்கர்னி மற்றும் இம்மானுவேல் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர். இப்பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி, தொடக்கநிலை ஆசிரியர்களின் சிறப்புகளை எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார். இப்பயிற்சியில் திருச்செந்துர் ஒன்றியத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு கற்பிக்கும் 141 ஆசிரியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இப்பயிற்சியினை வானரமுட்டி மாவட்ட ஆசிரியம் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் முருகேசன் ஒருங்கிணைத்து வருகிறார்.


Next Story