நர்சு தூக்குப்போட்டு தற்கொலை


நர்சு தூக்குப்போட்டு தற்கொலை
x

திருமணமான 1½ ஆண்டில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர்

வேலூர் அலமேலுமங்காபுரம் வனநகரை சேர்ந்தவர் பார்த்திபன். இவருடைய மனைவி ரூபினி (வயது 34), வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். பார்த்திபனும், ரூபினியும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூபினிக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும், அதற்காக அவர் பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரூபினி வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரூபினியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ரூபினியின் தாயார் தேனியை சேர்ந்த சிகாமணி சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை செய்துகொண்ட ரூபினிக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story