திருக்கோவிலூர் அருகே நர்சு பாலியல் பலாத்காரம் 3 பேர் மீது வழக்கு


திருக்கோவிலூர் அருகே    நர்சு பாலியல் பலாத்காரம்    3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே நர்சு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக வாலிபர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சொந்த ஊருக்கு வந்திருந்த இவரை வீரட்டாகரம் கிராமத்தை சேர்ந்த சின்ராசு என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த இளம்பெண்ணின் தாய் சின்ராசுவை சந்தித்து நியாயம் கேட்டுள்ளார். அதற்கு சின்ராசு உள்ளிட்ட 3 பேர் இளம்பெண்ணின் தாயை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சின்ராசு உள்பட 3 பேர் மீது திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story