விழுப்புரத்தில் பரபரப்புஅரசு மருத்துவக்கல்லூரியில் நர்சுக்கு கத்திக்குத்துகாதல் திருமணம் செய்த கணவர் வெறிச்செயல்


விழுப்புரத்தில் பரபரப்புஅரசு மருத்துவக்கல்லூரியில் நர்சுக்கு கத்திக்குத்துகாதல் திருமணம் செய்த கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியில் நர்சை அவரது காதல் கணவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஈச்சங்குப்பத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 27). தொழிலாளி. இவருடைய மனைவி பரணி (25).

இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து, 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கணவர் தற்கொலை முயற்சி

தம்பதி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த சரத்குமார், பிளீச்சிங் பவுடர் மற்றும் வீடு சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் திரவத்தை எடுத்து குடித்தார். இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கத்திக்குத்து

இதற்கிடையே நேற்று மதியம் 12 மணிக்கு, சரத்குமார் தனது மனைவியிடம் பேச வேண்டும் என்று அங்கிருந்த நர்சிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அவர், மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த தனது மனைவி பரணியை சந்தித்து, பேசினார். அதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சரத்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், பரணியை தலை, கழுத்து, கை உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக குத்தினார். இதனால் அங்கிருந்தவர்கள் ஓடினர். அப்போது சரத்குமாரும் தப்பி ஓட முயன்றார். உடனே காவலாளிகள் அவரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.

கைது

இதற்கிடையே கத்திக்குத்தில் படுகாயமடைந்த பரணி அங்கேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

இதுகுறித்த புகாரின் போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரத்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story