ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தின உறுதிமொழி ஏற்பு


ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தின உறுதிமொழி ஏற்பு
x

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு ஆஸ்பத்திாி டீன் பிரின்ஸ் பயஸ் தலைமை தாங்கி செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் கொரோனா கால கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களின் பணியை பாராட்டி பேசினார். இந்த ஆண்டு பணி நிறைவு பெற இருக்கும் 4 செவிலியர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இதில் உறைவிட மருத்துவா் ஜோசப் சென், உதவி உறைவிட மருத்துவா் ரெனிமோள் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் செவிலியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.


Next Story