மோட்டார் சைக்கிள் விபத்தில் நர்சின் தந்தை பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் நர்சின் தந்தை பலி
களியக்காவிளை:
கேரள மாநிலம் தனுவச்சபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 56). இவருடைய மகள் ரேஷ்மா. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சுரேஷ்குமார் பளுகல் பண்டாரகோணம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர், ஊருக்கு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பளுகலை அடுத்த மத்தம்பாலை பகுதியில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த மற்ெறாரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு சுரேஷ்குமார் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பாறசாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுரேஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சுரேஷ்குமாரின் மகள் ரேஷ்மா கொடுத்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான மோட்டார்சைக்கிள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.