13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் மனு
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வேலூர்
கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் செண்பகம் தலைமையில், ஏராளமான செவிலியர்கள் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
அந்த மனுவில், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர்களை துணை இயக்குனர் அலுவலகங்களுக்கு மாற்றுப் பணி அமர்த்துவதை ரத்து செய்ய வேண்டும். தடுப்பூசி தின ஊக்கத்தொகை, சில்லறை செலவினம் ஆகியவை செவிலியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முழுமையாக வழங்க வேண்டும். பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.
Related Tags :
Next Story