செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
x

மக்கள் நலன் கருதியும், செவிலியர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டும், மீண்டும் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

கொரோனாவின் தாக்கம் சிறிது காலம் இல்லாமல் இருந்து, தற்பொழுது தொற்று பரவல் வேகம் எடுக்கலாம் என்று சந்தேகம் எழும் இந்நேரத்தில் செவிலியர்களுக்கு தொடர்ந்து பணி வழங்காதது அரசின் சரியான முடிவல்ல. அரசு புதிதாக வேலைவாய்பை வழங்காமல் இருந்தாலும் பரவாயில்லை, இருப்பவர்களை வேலையை விட்டு அனுப்பாமல் இருக்க வேண்டும்.

ஆகவே தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களின் பணியை ரத்து செய்ததை கைவிட்டு, மக்கள் நலன் கருதியும், செவிலியர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டும், மீண்டும் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story