அரசு ஆஸ்பத்திரிகளில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்


அரசு ஆஸ்பத்திரிகளில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய செவிலியர்கள்
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு ஆஸ்பத்திரிகளில் கருப்பு பட்டை அணிந்து செவிலியர்கள் பணியாற்றினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு ஆஸ்பத்திரிகளில் கருப்பு பட்டை அணிந்து செவிலியர்கள் பணியாற்றினர்.

பணி நிரந்தரம் கோரி...

தமிழகத்தில் எம்.ஆர்.பி. தேர்வு எழுதி நியமிக்கப்பட்ட செவிலியர்கள் பலரும் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வந்தனர். அவர்களில் பலர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் சுமார் 2,500 செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. கொரோனா பரவிய கால கட்டத்தில் 2,500 செவிலியர்கள் கொரோனா நோயாளிகளை கவனிக்க பயன்படுத்தப்பட்டனர்.

இந்தநிலையில் அவர்களை நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். பின்னர் அந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும். ஆனால் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை என தமிழக அரசு அறிவித்தது.

செவிலியர்கள் போராட்டம்

இதனை தொடர்ந்து நேற்றும் இதே கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது பணி நிரந்தரம் செய்யக்கோரி குமரி மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்.


Next Story