நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை


நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள வாலத்தூரை சேர்ந்தவர் மோகன்ராஜ் மகள் ஜெயலட்சுமி (வயது 22). இவர் நாசரேத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மன உளைச்சல் காரணமாக கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம். இந்நிலையில் நேற்று வீட்டிலுள்ள விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய சகோதரர் ஜான்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பென்சன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story