நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி மேற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 46). இவரது மகள் அன்புச்செல்வி (21). இவர் இலுப்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்புச்செல்வி வீட்டின் உத்திரத்தில் சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைகண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அன்புச்செல்வி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story