மோட்டார் சைக்கிள் மோதி சத்துணவு அமைப்பாளர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி சத்துணவு அமைப்பாளர் சாவு
x

கோபால்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி சத்துணவு அமைப்பாளர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

கோபால்பட்டி அருகே உள்ள அய்யாபட்டியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 58). ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர். இவர் நேற்று இரவு அய்யாபட்டி-கோபால்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். பின்னால் அய்யாபட்டியை சேர்ந்த கதிர் (23) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கதிரின் மோட்டார் சைக்கிள் ஜெகநாதன் மீது மோதியது. இதில் ஜெகநாதன் படுகாயம் அடைநதார்.

அதேேபால் மோட்டார் சைக்கிளில் வந்த கதிரும் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபால்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ஜெகநாதன் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. கதிர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story