ரூ.6.63 லட்சத்தில் சத்துணவு மைய கட்டிடம்


ரூ.6.63 லட்சத்தில் சத்துணவு மைய கட்டிடம்
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலத்தில் ரூ.6.63 லட்சத்தில் சத்துணவு மைய கட்டிடம் கட்டும் பணியை ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

கெலமங்கலம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு தளி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் ரூ.6.63 லட்சத்தில் புதிய சத்துணவு மைய கட்டிடம் கட்ட பூமிபூஜை நடந்தது. இதில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், அரசு திட்டங்களை மாணவிகள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். பள்ளிக்கு புதிய கலையரங்கம் கட்ட ரூ.6 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ், ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கோவிந்தன், தொடக்க கல்வி மாவட்ட அலுவலர் முனிராஜ், தலைமை ஆசிரியர் (பொறுப்பு ) திம்மப்பா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நகர செயலாளர் மதுகுமார், பட்டதாரி ஆசிரியர்கள் சிவகாமி, லட்சுமி, தீபா, ரேணுகா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story