சத்துணவு ஊழியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
எஸ்.புதூரில் சத்துணவு ஊழியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
சிவகங்கை
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்க புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் எஸ்.புதூர் ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்க தலைவராக மலைச்சாமி, செயலாளராக சிதம்பரம், துணைத்தலைவராக கலையரசி, பொருளாளராக அழகம்மாள், செயற்குழு உறுப்பினராக சித்ராதேவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை சங்க தலைவர் சின்னப்பா, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முத்துக்குமார், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தேவி, மாவட்ட துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story