சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நடைபயண பிரசாரம்
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நடைபயண பிரசாரம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
பொன்னமராவதி:
பொன்னமராவதியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நடைபயண பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழக முதல்-அமைச்சர் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் வாக்குறுதியில் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்குவேன். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குவேன். ஓய்வு பெற்றுச் செல்லும் சத்துணவு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த தொகை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்குவேன். காலியாக உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்புவேன் எனவும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நடைபயண பிரசாரம் மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story