ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி


ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி
x

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின், மத்திய அரசின் திட்டங்களுக்கான வேளாண் துணை இயக்குநர் விஜயலட்சுமி தலைமை தாங்கி விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் இளவரசன் தோட்டக்கலைத் துறையில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.உதவி பேராசிரியர் (சுற்றுச்சூழல் அறிவியல்) செல்வமுருகன் ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் இயற்கை உரம் தயாரித்தல் போன்றவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வை. ராதாகிருஷ்ணன் அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் குறித்து பேசினார்.பயிற்சியில் அனைத்து விவசாயிகளுக்கும் நுண்ணூட்டக்கலவை, உயிர் உரங்கள் மற்றும் வயல் நீர்க் குழாய் போன்ற பல இடுபொருட்கள் வழங்கப்பட்டது.


Next Story