கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி


கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி
x

மூங்கில்குடி ஊராட்சியில் கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருவாரூர்

நன்னிலம்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் மூங்கில்குடி ஊராட்சியில் கறவை மாடு களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி மூங்கில் குடி அரசு விதைப்பண்னை அருகில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். திருவாரூர் உழவர் பயிற்சி மைய இணை பேராசிரியரும், தலைவருமான கதிர்ச்செல்வன், திட்ட முதன்மை ஆராய்ச்சியாளர் முருகேஸ்வரி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராமலிங்கம், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடை பராமரிப்பு குறித்தும் அதன் அவசியம் குறித்தும் பேசினர். மேலும் கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்தை விவசாயிகளிடம் வழங்கப்பட்டது. விழாவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story