சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்
கே.வி.குப்பத்தில் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்தினர்.
வேலூர்
கே.வி.குப்பம்
கே.வி.குப்பத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. சந்தை மேட்டிலிருந்து புறப்பட்டு பஸ் நிலையத்தை அடைந்தது. மாநில துணைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட தலைவர்கள் வில்வநாதன், செல்வம், மாவட்ட செயலாளர் ஏழுமலை, பொருளாளர் பெருமாள், கே.வி.குப்பம் ஒன்றிய தலைவர் உமாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சத்துணவு பணியிலிருந்து ஓய்வு பெறும் அமைப்பாளர்களுக்கு ஒட்டு மொத்தத் தொகையாக 5 லட்சம் ரூபாயும், சமையலருக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.24 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story