சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்


சத்துணவு ஊழியர்கள் ஊர்வலம்
x

திண்டுக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர்.

திண்டுக்கல்

சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கடந்த 4-ந்தேதி முதல் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு 2,100 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்கின்றனர்.

இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திண்டுக்கல்லில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இதற்கு மாநில தலைவர் கலா தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாநில இணை செயலாளர் பிச்சைவேல் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொடங்கிய ஊர்வலம் நாகல்நகரில் நிறைவடைந்தது. இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story