தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் பிரசார பேரணி


தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் பிரசார பேரணி
x

தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் பிரசார பேரணி நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நேற்று விழிப்புணர்வு பிரசார பேரணி நடத்தினர்.

கோரிக்கைகள்

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறி இருப்பது போன்று சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியராக்கி, ஊதிய உயர்வு, குறைந்தப்பட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஓய்வு பெறும் நாளில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர், சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இது தொடர்பாக தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் நேற்று விழிப்புணர்வு பிரசார பேரணி நடத்தினர்.

பேரணி

தூத்துக்குடி அரசு ஊழியர் சங்க அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய பேரணிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாக்கியசீலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முருகன் பேரணியை தொடங்கி வைத்தார். வணிகவரித் துறை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து தூத்துக்குடியின் முக்கிய சாலைகள் வழியாக பேரணியாக சென்று சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்தனர். இதில் சத்துணவு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கோரிக்கை விளக்க பிரசாரம் மேற்கொண்டனர்.


Next Story