சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மலர் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமாரி, கோரிக்கை விளக்கவுரையாற்றினார். சத்துணவு மற்றும் ஓய்வூதியர் சங்க மாநில தணிக்கையாளர் கிருஷ்ணமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் சாவித்திரி, ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் ரத்தினம், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நெடுமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைத்தலைவர் அபராஜிதன் நிறைவுரையாற்றினார். காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும், காலை உணவுத்திட்டத்தை சத்துணவு திட்டத்தின் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும், ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும், மகப்பேறு விடுப்பு அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப்போல் சத்துணவு ஊழியர்களுக்கும் 12 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் சுந்தர்ராமன், வெங்கடேசன், அருளரசி, சித்ரா, சங்கீதா உள்பட பலர் கருப்பு உடையணிந்து கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் தேவதாஸ் நன்றி கூறினார்.


Next Story