சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம்


சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம்
x

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலம்

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக்கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சித்ரா தலைமை தாங்கினார். மாநில தலைவர் சக்தி, மாநில செயலாளர் லதா, நாகை மாவட்ட செயலாளர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் தொடங்கி வைத்தார். சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக பணியாற்றி ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி திருச்சியில் கோரிக்கை விளக்க மாநாடும், 30-ந்தேதி சென்னையில் முதல்-அமைச்சரை சந்தித்து நீதிகேட்கும் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஊர்வலமாக சென்றனர்.


Next Story