பிப்ரவரி 20ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஆலோசனை
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
சென்னை,
சென்னையில் வரும் 20 ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
இது குறித்து ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச.ராமச்சந்திரன் தலைமையில், சென்னை, எக்மோர் பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் பிப்ரவரி 20 ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story