சட்ட வல்லுனர்களுடன் இன்று ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
சட்ட வல்லுனர்களுடன் இன்று ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்கிறார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் அன்று இரவே டெல்லி சென்றார். நேற்று, பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் சென்னை திரும்பும் ஓ.பன்னீர்செல்வம், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன மேற்கொள்ளலாம் என்று சட்ட வல்லுனர்களுடன் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளார். மேலும், சென்னையில் தனது ஆதரவாளர்களை மீண்டும் சந்திக்க இருக்கிறார்.
Related Tags :
Next Story