'இணைந்து செயல்பட்டால்தான் அ.தி.மு.க.வுக்கு நல்லது' ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


இணைந்து செயல்பட்டால்தான் அ.தி.மு.க.வுக்கு நல்லது ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x

‘இணைந்து செயல்பட்டால்தான் அ.தி.மு.க.வுக்கு நல்லது' என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

சட்டசபை கூட்டம் நடைபெறுவது குறித்து எங்களுக்கு தகவல் வந்தது. அ.தி.மு.க. சார்பில் ஜனநாயக கடமையாற்றுவதற்காக சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்டோம். ஏற்கனவே, சபாநாயகரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.

அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை பொறுத்தவரை, அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நாங்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர்களிடம் கேளுங்கள்

அதனைத்தொடர்ந்து, நிருபர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

அவர்கள் பற்றிய கேள்விகளை அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். அ.தி.மு.க.வை தொண்டர்களின் இயக்கமாகத்தான்எம்.ஜி.ஆர். உருவாக்கினார். 3 முறை முதல்-அமைச்சராக இருந்து நல்ல பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதா, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக 30 ஆண்டுகாலம் பொறுப்பேற்று, இந்த இயக்கத்துக்கு மிகப்பெரிய வலுவினையும், தமிழக மக்களிடம் மிகப்பெரிய மரியாதையையும், அன்பையும் பெற்றார்.

கொள்கையில் உறுதி

எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், எவ்வளவு அச்சுறுத்தல் வந்தாலும், அதை கட்டிக்காப்பாற்றுகின்ற சிப்பாய்களாகத்தான் ஒன்றரை கோடி தொண்டர்களும் இருக்கிறார்கள். எங்களுக்கு தமிழகத்தில் இருக்கிற அனைத்து பொதுமக்களும் தங்களது ஆதரவை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் அடித்தளம், ஆணி வேர், அந்த தொண்டர்களுக்கு எம்.ஜி.ஆர். மிகப்பெரிய அந்தஸ்தை தந்திருக்கிறார்.

சாதாரண தொண்டர்களும் தலைமை பொறுப்புக்கு வரமுடியும் என்பதை சட்டவிதிகள் மூலம் வகுத்து தந்திருக்கிறார். இப்பொழுது இருக்கின்ற சட்ட விதிகள் மாற்றப்படுகின்ற அபாயகரமான ஒரு சூழல், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எண்ணத்துக்கு மாறுபட்டு, கட்சியின் தலைமை பொறுப்புக்கு வருகின்றவர்கள் 10 மாவட்ட செயலாளர் முன்மொழிய வேண்டும் என்றும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்றும், அந்த பொறுப்புக்கு போட்டியிடுகின்றவர்கள் 5 ஆண்டு காலம் தலைமை கழகத்தின் நிர்வாகியாக பணியாற்றியிருக்க வேண்டும் என்கின்ற அந்த விதி எம்.ஜி.ஆரின் இதயத்தில், பெரிய வலியை அவரது ஆன்மாவில் உண்டு பண்ணும் என்பதை நான் எதிர்த்து, ஜனநாயகத்தில் சாதாரண தொண்டன் கூட கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்கின்ற,எம்.ஜி.ஆரின் விதியின்படிதான் அ.தி.மு.க. நடைபெற வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக நின்று போராடி கொண்டிருக்கிறோம்.

முதலில் இருந்தே நான் கட்சியின் நலனுக்காக இணைய வேண்டும் என்றுதான் கூறிவருகிறேன். அப்படி இணைந்தால்தான் கட்சிக்கு நல்லது என்பதே எனது கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story