சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவை புகழ்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம்..!


சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவை புகழ்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம்..!
x

சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவை ஓ.பன்னீர்செல்வம் புகழ்ந்து பேசினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி வாய்ப்பு வழங்கவில்லை என திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோவமாக சத்தம் எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய சபாநாயகர் அப்பாவு இது போன்று அவையில் பேசக்கூடாது. பெரிய சத்தம் போடக்கூடாது என கடுமையாக எச்சரித்தார்.

அப்போது எழுந்த ஓ.பன்னீர்செல்வம் தானும் பேச வேண்டும் என வாய்ப்பு கேட்டார். சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார்

தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்கள் இந்த சிறப்பு வாயந்த வரலாற்றுமிக்க சட்டமன்றத்தை நடத்துவதில் அவர் ஏற்கனவே ஆசிரியர் என்ற பணியை மேற்கொண்டு வருகிறார். இன்று அதிலிருந்து நாங்கள் புரிந்து கொண்டது சபாநாயகர் அப்பாவு சில நேரங்களில் கனிவான ஆசிரியராகவும் இருக்கிறார்.. சில நேரங்களில் கண்டிப்பான ஆசிரியராகவும் இருப்பதாக ஓ.பிஎஸ் தெரிவித்தார். இதை கேட்ட சபாநாயகர் அப்பாவு, அப்ப நீங்க துணை கேள்வி கேட்க வரலையா..? என நகைச்சுவையாக கூறினார்.


Next Story