பாட்னாவில் நடந்த எதிர்கட்சிகள் கூட்டம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்
பாட்னாவில் நடந்த எதிர்கட்சிகள் கூட்டம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்தார்
மதுரை
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாட்னாவில் எதிர்கட்சிகளின் கூட்டம் நடந்துள்ளது. கடந்த காலங்களில் பலமுறை எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்கின்ற உரிமையை மக்களிடமிருந்து பெற்றும், அவர்களால் அதை ஒழுங்காக வழிநடத்த செல்ல முடியாத சூழல்தான் கடந்த கால அனுபவமாக இருக்கிறது. இதுவும் அதுவாகத்தான் முடியும். ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை மாதிரி, எதிர்கட்சிகளின் கூட்டம் உள்ளது. மாமன்னன் திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. பார்க்காமல் கருத்து சொல்லக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story