ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்
பழனி முருகன் கோவிலில், ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
திண்டுக்கல்
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர், சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் மீண்டும் ரோப்கார் வழியாக அடிவாரம் வந்தார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர், எவ்வித பதிலும் கூறாமல் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பழனி முருகன் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story