ஓ.பன்னீர்செல்வம் அணி ஆதரவாளர்கள் கூட்டம்
பொட்டல்புதூரில் ஓ.பன்னீர்செல்வம் அணி ஆதரவாளர்கள் கூட்டம் நடந்தது.
தென்காசி
கடையம்:
கடையம் அருகே பொட்டல்புதூரில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்லம் அணி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கணபதி, பொட்டல்புதூர் முன்னாள் கிளை செயலாளர் சுப்பிரமணிய பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினா். ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அடைச்சாணி, துப்பாக்குடி ஆகிய பஞ்சாயத்துகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். அந்தியூர் பஞ்சாயத்தில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டினார்.
Related Tags :
Next Story