தாயாரின் அஸ்தியை கரைக்க ஓ.பன்னீர்செல்வம் காசி பயணம்


தாயாரின் அஸ்தியை கரைக்க  ஓ.பன்னீர்செல்வம் காசி பயணம்
x

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் இறந்ததால் அவரது அஸ்தியை காசிக்கு சென்று கரைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் அஸ்தியை கங்கை ஆற்றில் கரைப்பதற்காக காசிக்கு சென்றனர்.

மதுரை


முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். இதனை தொடர்ந்து அவரது உடல் பெரியகுளம் நகராட்சியில் பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து தாயின் அஸ்தியை காசிக்கு சென்று கரைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் காரில் மதுரைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் அஸ்தியை கங்கை ஆற்றில் கரைப்பதற்காக காசிக்கு சென்றனர்.


Next Story