ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் மனைவிக்கு திதி கொடுத்த ஓ.பன்னீர்செல்வம்
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மறைந்த தனது மனைவிக்கு திதி கொடுத்தார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய இன்று காலை வந்தார். அக்னி தீர்த்த கடலில் மறைந்த தனது மனைவிக்கு ஓ.பன்னீர்செல்வம் திதி கொடுத்தார். பின்னர், கோவிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளிலும் தனது குடும்பத்தினருடன் புனித நீராடினார்.
மாலை 4 மணி அளவில் கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்த ஓ.பன்னீர்செல்வம் விஸ்வநாதர் சன்னதி எதிரே உள்ள பிரகாரத்தில் அமர்ந்து ருத்ராபிஷேக பூஜை மற்றும் 108 சங்காபிஷேக பூஜையிலும் கலந்து கொண்டார். பின்னர், புனித நீர் வைக்கப்பட்டிருந்த கலசத்தை அவரும், அவரது மகனும் கையில் ஏந்தியபடி சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
தொடர்ந்து கருவறையில் உள்ள சாமிக்கு புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு மகா தீபாரதனை பூஜைகளும் நடைபெற்றது.
Related Tags :
Next Story