விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவியிடம் ஆபாச பேச்சு;தமிழ் ஆசிரியர் அதிரடி கைது


விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவியிடம் ஆபாச பேச்சு;தமிழ் ஆசிரியர் அதிரடி கைது
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக தமிழ் ஆசிரியர் அதிரடி கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய தமிழ் ஆசிரியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தமிழ் ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ஜெபதுரை. இவருடைய மகன் மில்டன் ஞானசிங்கம் (வயது 48). இவர் விளாத்திகுளம் அருகே ஜமீன் கரிசல்குளத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் விளாத்திகுளத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து தினமும் பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்தார்.

சம்பவத்தன்று இவர் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு மாணவியை ஆபாசமாக பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டுக்கு சென்றதும், எறும்பு மருந்து பொடியை (விஷம்) தண்ணீரில் கலந்து குடிக்க முயன்றார். இதனைப் பார்த்த மாணவியின் தாயார் அதிர்ச்சி அடைந்து உடனே அதனை தட்டி விட்டார்.

போக்சோ சட்டத்தில் கைது

தொடர்ந்து மாணவியிடம் தாயார் விசாரித்தபோது, பள்ளிக்கூடத்தில் நடந்ததை மாணவி தெரிவித்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், பள்ளிக்கூட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவியின் பெற்றோர், விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அனிதா போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் மில்டன் ஞானசிங்கத்தை கைது செய்தார்.


Next Story