'ஆடல் பாடலில் ஆபாசத்தை அனுமதிக்கக்கூடாது' - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஆடல் பாடலில் ஆபாசத்தை அனுமதிக்கக்கூடாது  -  மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன், குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனமாட அனுமதிக்கக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இணையதளத்தில் குறவன் குறத்தி என தேடும்போது ஆபாச நடனங்கள் வருவதாக மனுதாரர் குற்றச்சாட்டியுள்ளார். இணையத்தில் குறவன் குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாச நடனங்களை நீக்கவும் மனுதாரர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்நாட்டில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனமாட அனுமதிக்கக்கூடாது எனவும், குறவன் குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனமாடினால் புகாரளிக்க தனிப்பிரிவை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் குறவன் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.


Next Story