நம்மாழ்வார் நினைவு தினம் அனுசரிப்பு
வாசுதேவநல்லூரில் நம்மாழ்வார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தென்காசி
வாசுதேவநல்லூர்:
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு நண்பனின் கரங்கள் அறக்கட்டளை சார்பாக வாசுதேவநல்லூர் பஸ் நிலையத்தில் 500 மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்.முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
மாவட்ட துணை செயலாளர் வே.மனோகரன், வாசுதேவநல்லூர் பேரூர் கழக செயலாளர் ரூபி. பாலசுப்பிரமணியன், இளைஞரணி முனீஸ்வரன், டாக்டர் கிருஷ்ணா, மா.செல்வம், மகேந்திரன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகள் ஜெயப்பிரகாஷ் மற்றும் அறக்கட்டளை சார்பில் ெசய்யப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story