செங்கொடி நினைவு தினம் அனுசரிப்பு
திண்டுக்கல்லில் செங்கொடி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
திண்டுக்கல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி காஞ்சீபுரத்தை சேர்ந்த செங்கொடி என்ற பெண் கடந்த 2011-ம் ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்தார். அவருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வீரவணக்கம் செலுத்தப்பட்டு, நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் செங்கொடி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயசுந்தர் தலைமை தாங்கினார். பின்னர் செங்கொடியின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து மேற்கு மாநகர செயலாளர் மருதநாயகம், கிழக்கு மாநகர செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story