சிவாஜி கணேசன் நினைவு தினம் அனுசரிப்பு


சிவாஜி கணேசன் நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 22 July 2023 1:00 AM IST (Updated: 22 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் நாகல்நகரில் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் தலைமை மன்றம் சார்பில், சிவாஜி கணேசன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நடிகர் சிவாஜி கணேசன் உருவபடத்துக்கு கவுரவு ஆலோசகர் டால்டன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் வழங்கினார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு-புத்தகம், பெண்களுக்கு சேலை ஆகியவற்றை நிர்வாகி முத்துக்குமார், செயலாளர் சத்தியன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாகிகள் வெங்கிடு, கவுதமன் ஆகியோர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story