காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்
தமிழ்நாட்டில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றவேண்டும் என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் தலைவர் சண்முகப்பா தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றவேண்டும் என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் தலைவர் சண்முகப்பா தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகில் புத்துகோவில் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்ற கோரியும், சுங்க கட்டண உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
லாரி உரிமையாளர் சங்க தலைவர் எம்.அனுமுத்து, செயலாளர் எஸ்.தமிழ்வாணன் ஆகியோர் தலைமை தாங்கினர். பொருளாளர் பாண்டியன், துணைத்தலைவர் சண்முகம், துணை செயலாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு உடனடியாக காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடக்கோரியும், சுங்க கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது.
வேலை நிறுத்த போராட்டம்
அதைத் தொடர்ந்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் தலைவர் சண்முகப்பா நிருபர்களிடம் கூறுகையில், 'தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை அகற்றுவதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதை இன்று வரை நிறைவேற்றவில்லை. எனவே, காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு அகற்றப்படாவிட்டால் லாரி உரிமையாளர்கள் சங்கத்தை ஒன்று திரட்டி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்' என்றார்.