கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆக்கிரமிப்பு:வாய்க்காலாக மாறிய முல்லைப்பெரியாறு


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆக்கிரமிப்பு:வாய்க்காலாக மாறிய முல்லைப்பெரியாறு
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி ஆக்கிரமிப்பால் முல்லைப்பெரியாறு சுருங்கி வாய்க்காலாக மாறி வருகிறது.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை சுமார் 17 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் இங்கு நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீராதாரமாகவும் இந்த முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. இந்நிலையில் கடந்த 1-ந்தேதி கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் செல்லும் ஆற்றுப்பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பு செய்து தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர். இதனால் முல்லைப்பெரியாறு சுருங்கி வாய்க்காலாக மாறி வருகிறது. எனவே ஆற்றுப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story