கீழடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்


கீழடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:16:02+05:30)

கீழடியில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டது.

சிவகங்கை

திருப்புவனம்,

கீழடி ஊராட்சி ஒன்றிய பொறுப்பில் அட்டையடி கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஊராட்சி ஒன்றியம் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் நேற்று திருப்புவனம் தாசில்தார் கண்ணன், யூனியன் ஆணையாளர் ராஜசேகரன், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். இதையொட்டி மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்பு இரண்டு பொக்லைன் வாகனங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சிலர் தாங்களாகவே முன்வந்து தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.Next Story