ஓடக்கரை சுடலை மாடசாமி கோவில் திருவிழா


ஓடக்கரை சுடலை மாடசாமி கோவில் திருவிழா
x

மேலச்சாத்தான்குளம் ஓடக்கரை சுடலை மாடசாமி கோவில் திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

மேலசாத்தான்குளம் ஓடைக்கரை சுடலை மாடசாமி கோவில் கொடைவிழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை 5 மணிக்கு கரையடி சுடலைமாடசாமி கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், கும்பாபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. 2-ஆம் நாள் கரையடி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலில் சுவாமிக்கு அலங்கார பூஜை, மேளத்தாளத்துடன் முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து வழிபாடு நடத்தினர். பின்னர் சுவாமிக்கு அலங்கார பூஜை, சாமக்கொடையும், 3-ஆம் நாள் சுவாமி மஞ்சள் நீராடுதல், சிறப்பு பூஜை நடைபெற்றது.


Next Story