ரெயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா மாநில வாலிபர் கைது
ரெயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு வரை செல்லக்கூடிய பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் வாணியம்பாடி-ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் சேலம் ெரயில்வே உட்கோட்ட சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ஏறி, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா? எனச் சோதனை செய்தனர்.
அதில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைக்கு அடியில் இருந்த ஒரு ைபயை எடுத்துப் பார்த்தனர். அதில் 18 சிறிய பண்டலில் சுமார் 18 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. கஞ்சாவை கடத்தியவர் ரெயிலில் பயணம் செய்த ஒடிசா மாநிலம் சந்தன்பூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திர பிஸ்வால் மகன் கைலாஷ்பிஸ்வால் (வயது 46) எனத் தெரிய வந்தது.
அவர், ஒடிசா மாநிலம் குல்பானி பகுதியில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி பெங்களூரு பகுதிக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வற்காக கூறினார். அவரிடம் இருந்து 18 கிலோ கஞ்சாைவ பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். அவரை, போலீசார் கைது செய்து, திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.