ரோட்டோரம் கிடந்த போலீசாரின் கவச உடைகளால் பரபரப்பு
புதுக்கோட்டையில் ரோட்டோரம் கிடந்த போலீசாரின் கவச உடைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பாலம் பகுதியில் ரோட்டோரம் முட்புதருக்குள் போலீசார் பாதுகாப்பு பணியின் போது அணியக்கூடிய பாதுகாப்பு கவச உடைகள் கிடந்தன. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பயன்படுத்திய பழைய கவச உடைகள், தலைக்கவசம் ஆகியவை கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இந்த பழைய கவச உடைகள் மிகவும் பழமையான பிறகு ஏலம் விடப்படும். அதனை ஏலம் எடுத்தவர்கள் யாரேனும் சாலையோரம் வீசி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் அந்த கவச உடைகளை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story