பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு அலுவலக உதவியாளர் பணி: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்


பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு அலுவலக உதவியாளர் பணி: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
x
தினத்தந்தி 10 May 2023 1:33 PM IST (Updated: 10 May 2023 2:24 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக உதவியாளர் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

பெரம்பலூரை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பாப்பாத்திக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலக உதவியாளராக பணியாற்றுவதற்கான பணி ஆணையை தலைமை செயலகத்தில் வழங்கினார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தனது குடும்பசூழலை விளக்கி வேலைவாய்ப்பு கேட்டு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதுகலை பட்டதாரியான அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் ஓஏவாக பணிபுரிவதற்கான ஆணையினை வழங்கினார். மாற்றுத்திறனாளியான பாப்பாத்தி வேலை வேண்டி கோரிக்கை வைத்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.


Next Story