கடலூரில் அலுவலக உதவியாளர் ஓய்வூதியர் சங்க கூட்டம்


கடலூரில் அலுவலக உதவியாளர் ஓய்வூதியர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் அலுவலக உதவியாளர் ஓய்வூதியர் சங்க கூட்டம் நடைபெற்றது.

கடலூர்

தமிழ்நாடு பணி உயர்வு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர் ஓய்வூதியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் கோவிந்தராசன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் சுப்பிரமணியன், கிருஷ்ணன், முருகேசன், சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேகர் வரவேற்றார். மாநில பொது செயலாளர் அப்பாய், மாநில பொருளாளர் ராமகிருஷ்ணன், மாநில துணை தலைவர் சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கட்டுமானம், மனைத்தொழில் கூட்டமைப்பு மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலவாரிய தலைவர் பொன்குமார் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் வருவாய் துறையில் பணிபுரிந்து பதவி உயர்வு பெற்று, பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு பென்சன் 100 சதவீத பணப்பலன்கள் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் மாவட்ட அமைப்பை விரிவுபடுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில பொருளாளர் ஜெகதீசன், மாநில இணை செயலாளர்கள் முருகன், பானுகோபன், மண்டல தலைவர் செந்தமிழ் கொற்றவன், மண்டல செயலாளர் ஜெயராமன், மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட துணை தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய துணை செயலாளர் வீரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story