ரேஷன் கடையில் அதிகாரி ஆய்வு
ரேஷன் கடையில் அதிகாரி ஆய்வு
பல்லடம்,
பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களின் தரம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். அப்போது அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் இயங்குவது குறித்து ் தகவல் தெரிவிக்கப்பட்டது. பல்லடம்-மங்கலம் ரோட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கம் விடுதியை ஆய்வு செய்தார். தபால் அலுவலக வீதியில் உள்ள கூட்டுறவு சங்க கட்டடத்தில் செயல்பட்டு வரும் இ- சேவை மையத்தையும் ஆய்வு செய்தார். பச்சாபாளையம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டு, நீதிமன்ற வழக்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை இடத்தை ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அவரிடம் மின்மயான திட்டம் செயல்பட்டு வருகின்ற வேளையில் புதிதாக இன்னொன்று அமைப்பது மக்கள் வரிப்பணம் வீணாக வழி வகுக்கும் என்று தெரிவித்தனர்.
----------