வேளாண்மை விரிவாக்க மையங்களில் இணை இயக்குனர் ஆய்வு


வேளாண்மை விரிவாக்க மையங்களில் இணை இயக்குனர் ஆய்வு
x

திருவையாறில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு வட்டாரத்தில் தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின், வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) ஈஸ்வர் ஆகியோர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை ஆய்வு செய்தனர். பின்னர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் சாத்தனூர் கிராமத்தில் உள்ள மீன் குட்டையை பார்வையிட்டனர். மேலும் அங்குள்ள விவசாயிகளிடம் அத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடல் செய்து தேவைகளை கேட்டறிந்தனர். மேலும். கடுவெளி கிராம நிர்வாக அலுவலகத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.


Next Story