தூய்மை பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு
சீர்காழி ஒன்றியத்தில் தூய்மை பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தாா்.
மயிலாடுதுறை
திருவெண்காடு;
சீர்காழி ஒன்றியத்துக்கு உட்பட்ட 37 ஊராட்சிகளில் நேற்று தூய்மை பணிகள் நடந்தது. திருவங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட மடவிளாகம், 4 வீதிகள், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் நடந்தன. இதில் திருநகரி, பெருந்தோட்டம், மணிக்கிராமம், காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த தூய்மை பணிகளை சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருள்மொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பால்ராஜ், திருநாவுக்கரசு, ஊராட்சி தலைவர்கள் சுகந்தி நடராஜன், சசிகுமார், புஷ்பவல்லி ராஜா உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story